படங்களைப் பாருங்கள்,அவ்வேளையில் மனிதனின் நடவடிக்கையையும்,நாயின் நடவடிக்கையையும்..!
ஒரு நாய் காரினால் மோதப்பட்டு செத்துக்கிடக்கிறது.
இன்னொரு நாய் அதைக் கண்டுவிடுகிறது.
மின்னலைப் போல விரையும் வாகனங்களுக்கு மத்தியில் எந்த அச்சமுமின்றி தன்னைப் போல ஒரு உயிரைக் காப்பாற்ற இறந்த நாயின் அருகே ஓடி வந்து அதனைத் தட்டியெழுப்புகிறது.

"எழும்பு நண்பா எழும்பு,இங்கேயெல்லாம் தூங்கக் கூடாது.பாரு வாகனமெல்லாம் எவ்வளவு விரைவாகப் போகுதுன்னு"

"நீ எழும்புகிற மாதிரித் தெரியவில்லை.இரு நான் இந்த வீதியின் ஓரத்துக்கு உன்னைப் பாதுகாப்பாகத் தள்ளிச் செல்கிறேன்"

"இவன் மிகவும் பாரமாக இருக்கிறான்.என்னால் தனியாகத் தள்ள முடியவில்லை.தயவுசெய்து யாராவது உதவுவீர்களா?"

"எனக்கு உதவுவதை விட்டு போட்டோ எடுக்கிறீர்களா?யாராவது உதவும் வரையில் நானும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்"
நமது மனிதாபிமானங்கள் எந்தளவுக்கு இருக்கின்றன என்பதற்கு இப்படங்கள் ஒரு சிறிய உதாரணம் மாத்திரமே.
ஐந்தறிவான அந்த ஜீவனுக்கு உதவாமல் ஆறறிவான நாம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறொம்.
"ஆணென்ன,பெண்ணென்ன,நீயென்ன,நானென்ன..எல்லாம் ஓரினம்தான்... " போன்ற பாடல்களில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கின்றன நம் மனிதாபிமானங்கள்.

16 comments:
மனிதருக்குக் கிடைத்த பகுத்தறிவால் அவனது குணம் என்னவாகிப் போனது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இப்படம்.
ஒரு நிமிடம் உலுக்குகிறதே..
நன்றி ரிவான்..
அடப்பாவமே...........
தோழனுக்கு அடிபட்டுக்கிடக்கா?
யாராச்சும் உதவுங்கப்பா ப்ளீஸ்....
இந்த மாதிரி ஒரு விஷயத்தை நான் துணைவியின் பிரிவு என்னும் தலைப்பில் பதிவாகப் போட்டுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நெகிழவைக்கும் சம்பவம். தோழமை உணர்வு எல்லா உயிர்களுக்கும் பொதுவானதுதான் போல..:)
பகிர்ந்துக்கொண்டதற்க்கு நன்றிகள் நண்பா...:)
மனுசங்க அடிபட்டு கிடந்தாலும் நின்று பார்க்காதவர்கள் இதை பார்த்தால் நல்ல பாடமாக இருக்கும்
பிரிவு, பாசம் ,நேசம் எல்லா உயிர்களுக்கும் ஒன்று தானே..
//மனிதருக்குக் கிடைத்த பகுத்தறிவால் அவனது குணம் என்னவாகிப் போனது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இப்படம்.//
ஆமாம் உண்மைத்தமிழன்.
பரபரத்து ஓடும் நேரங்கள் மனிதனின் மனிதாபிமானத்தையும் எடுத்துக்கொண்டே ஓடுகின்றன என்பதற்கு ஒரு சிறிய உதாரணமே இது.
எனது பதிவுகளுக்கு நீண்ட நாட்களின் பின்னரான உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க டீச்சர் :)
//அடப்பாவமே...........
தோழனுக்கு அடிபட்டுக்கிடக்கா?
யாராச்சும் உதவுங்கப்பா ப்ளீஸ்....//
இது போன்ற உள்ளம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..அதுதானே இங்கு பிரச்சினை !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர் :)
அன்பின் டோண்டு ராகவன்,
எனது வலைப்பதிவுக்கு உங்கள் முதல் வருகை என எண்ணுகிறேன்.
உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.
உங்களது பதிவிலும் ஒரு பறவையின் தவிப்பைப் பார்த்துவந்தேன்.நம்மைப் பொறுத்தவரையிலது ஒரு சிறிய ஜீவனென எளிதில் ஒதுக்கிவிடுகிறோம்.ஆனால் அதற்கும் மனம் என்ற ஒன்று இருப்பதை இது போன்ற நிகழ்வுகள் தான் எடுத்துக் காட்டுகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ரசிகன்,
//நெகிழவைக்கும் சம்பவம். தோழமை உணர்வு எல்லா உயிர்களுக்கும் பொதுவானதுதான் போல..:)//
சரியாகச் சொன்னீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அன்பின் சக்தி,
//மனுசங்க அடிபட்டு கிடந்தாலும் நின்று பார்க்காதவர்கள் இதை பார்த்தால் நல்ல பாடமாக இருக்கும்
பிரிவு, பாசம் ,நேசம் எல்லா உயிர்களுக்கும் ஒன்று தானே..//
ஆமாம் சக்தி...அனைவரும் பார்த்துச் சிந்திக்கவேண்டிய படங்களிவை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி :)
இதில் ஆறறிவு யாருக்கு? ஐந்தறிவு யாருக்கு? குழப்பமாகத்தான் இருக்கிறது:) எதைப் பார்த்தாலும் போட்டோ... மஹாபலிபுரம் பார்க்கப் போகிறோம் என்று வருவார்கள். அங்கு போய் யார் சிலைகளைப் பார்ப்பது... போட்டோமேனியாக் வரவர அதிகமாகிவருகிறது. கவனித்தீர்களா?
அன்பின் தமிழ்நதி,
ஒரு உயிரின் பரிதவிப்பு இங்கு யாருக்கும் புரிவதேயில்லை.
உலகம் மிகவும் முன்னேறியிருப்பதாக மார் தட்டிக் கொள்கிறோம்.
ஆனால் வீதியில் அடிபட்ட பூனையை முற்றத்தில் புதைக்கிற கற்றறியாத பாட்டியின் வாஞ்சை,சகலதும் கற்றறிந்ததாக நாங்கள் கருதும் அநேகரிடம் காணப்படுவதில்லை.
சில சமயம் கேமராக்கள் வெளிக்காட்சிகளை விட,எடுப்பவரின் உள்ளங்களையே வெளிக்காட்டுகின்றன.
அவ்வாறான காட்சியொன்றுதான் மேலுள்ளது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
heartbreaking....
அன்பின் முதம்மில்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
இது பற்றிய செய்தியை காண்டீபன் தனது இயற்கை வலைப்பூவில் ஏற்கனவே பதிந்துள்ளாரே !
நந்தவனத்து ஆண்டி
ஆமாம் நந்தவனத்து ஆண்டி.
அவரவர் பார்வையில் சொந்தமான கருத்துக்களை எழுதிப் பதிவது தவறில்லையல்லவா?
ஒரே திரைப்படத்துக்கு எத்தனை பேர் வெவ்வேறு விதமாக விமர்சனங்கள் எழுதுகிறோம்.
அது போலத்தான் இதுவும் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment