தர்ப்பூசணிப் பழங்கள் பெரிய உருளைவடிவானவை.வாடிக்கையாளர்களால் அதிகளவில் விரும்பி வாங்கப்படுபவை.ஆனால் கடைகளில் மிகப்பெரும் இடத்தை அவை அடைத்துக்கொண்டன.
இதனால் விவசாயிகளிடமிருந்து கடைச் சொந்தக்காரர்களால் அவை வாங்கப்படும் வீதம் குறைந்தது.
எனவே விவசாயிகள் ஒன்று கூடிச் சிந்திக்கத் தொடங்கினர்.தர்ப்பூசணிகளை பெட்டிவடிவில் வளர்த்தெடுப்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர்.அதன் முடிவில் தர்ப்பூசணிகள் சிறிதாக இருக்கும்போதே பெட்டியில் அடைக்கப்படுமிடத்து அது பெரிதாகும் போது பெட்டிவடிவிலேயே இருக்குமெனக் கண்டறிந்தனர்.

அதன்படியே காய்களை உருவாக்கத்தொடங்கினர்.கடையிலும்,வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியிலும் பெரும் இடத்தை அடைக்காத காரணத்தால் கடைக்காரர்களாலும்,வாடிக்கையாளர்களாலும் விரும்பி வாங்கப்பட்டன அப்பெட்டி வடிவக் காய்கள்.


இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எமக்கு ஒரு பாடமுள்ளது.
அநேகமாக நம் மனதில் 'இது இப்படித்தான் இருக்கும்'என்ற உறுதி தோன்றிய ஒன்றை மாற்றுவது பற்றிச் சிந்திக்கவே மாட்டோம்.ஆனால் நாம் சிந்திக்குமிடத்து பலவழிகள் இருக்கும்.
முயற்சித்துப் பார்க்கவேண்டும்.முயற்சியிலெடுத்து வைக்கும் முதலடி தோல்வியைத் தழுவிடினும்,ஏதாவதொரு வழியில் வெற்றி நிச்சயம்.

15 comments:
அடடா.. அருமை:)
//இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எமக்கு ஒரு பாடமுள்ளது.
அநேகமாக நம் மனதில் 'இது இப்படித்தான் இருக்கும்'என்ற உறுதி தோன்றிய ஒன்றை மாற்றுவது பற்றிச் சிந்திக்கவே மாட்டோம்.ஆனால் நாம் சிந்திக்குமிடத்து பலவழிகள் இருக்கும்.
முயற்சித்துப் பார்க்கவேண்டும்.முயற்சியிலெடுத்து வைக்கும் முதலடி தோல்வியைத் தழுவிடினும்,ஏதாவதொரு வழியில் வெற்றி நிச்சயம்.//
இது டாப்பு:)
ஜப்பானியர்கள் எப்பவுமே எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர்கள் !!
சில மாதங்கள் முன்னர், இதே கருத்தில் எமது பதிவு ஒன்று. வாசித்துப் பாருங்கள். !
ஆஹா ரிஷானு அண்ணாத்த, இது மெய்யாலுமா இல்ல...? :))) உஸ்கூலு காலத்துல ப்டிச்ச தெனாலி ராமன் பானைக்குள்ள பலாப்பழம் வளர்த்த கதை கியாபகத்துக்கு வருதுப்பா. அதக் கண்டுபுடிக்க சப்பான்காரனுக்கு இம்மாம் நாள் அயிட்ச்சா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
அட..பொட்டிபொட்டியா தர்பூசணி அழகோ அழகு..
ஜக்கு அண்ணாத்த..
அது பலாப்பழமா?
பூணிப்பழம் ன்னு படுச்ச ஞாபகம்..
/கடையிலும்,வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியிலும் பெரும் இடத்தை அடைக்காத காரணத்தால் கடைக்காரர்களாலும்,வாடிக்கையாளர்களாலும் விரும்பி வாங்கப்பட்டன அப்பெட்டி வடிவக் காய்கள்./
Excellent idea. Looks so nice and compact.
Ramya
படங்களும்
//ஒன்றை மாற்றுவது பற்றிச் சிந்திக்கவே மாட்டோம்.ஆனால் நாம் சிந்திக்குமிடத்து பலவழிகள் இருக்கும்.
//
கருத்துக்களும்
சிந்திப்பதற்குப் பொருத்தமானதாகவே இருக்கின்றன.சபாஷ்!!!
அன்பின் ரசிகன் :),
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
ஆமாம் சதங்கா.
உங்கள் கருத்து மிகச் சரியானது.
ஜப்பானியர்களின் சுறுசுறுப்பும்,விடாமுயற்சியுமே வெற்றிகளுக்குக் காரணமென எண்ணுகிறேன்.
உங்கள் பதிவையும் பார்த்தேன்.
மிக அழகாகவும்,விரிவாகவும் எழூதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க ஜாம்பஜார் அண்ணாத்தே..
அது இன்னா கதைன்னு என்கு தெரியலியே அண்ணாத்தே..?
ஒரு பதிவுல சொல்லிட்டீங்கன்னா உபயோகமா இருக்கும்ல.. :P
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கோகுலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
வாங்க ரம்யா.. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் நிர்ஷன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
அடடா..! நம்பவே முடியவில்லை. நல்ல ஐடியா தான். படங்கள் அருமை.
//ஆ.கோகுலன் said...
அடடா..! நம்பவே முடியவில்லை. நல்ல ஐடியா தான். படங்கள் அருமை.//
வாங்க கோகுலன்.
உங்கள் முதல் வருகை என நினைக்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment